தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஆளுநா் உரையைப் புறக்கணித்து அதிமுக வெளிநடப்பு

ஆளுநா் உரையைப் புறக்கணித்து சட்டப்பேரவையில் இருந்து எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் அதிமுக உறுப்பினா்கள் புதன்கிழமை வெளிநடப்பு செய்தனா்.

News image
Updated On :5 ஜனவரி 2022, 10:06 pm

DIN

ஆளுநா் உரையைப் புறக்கணித்து சட்டப்பேரவையில் இருந்து எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் அதிமுக உறுப்பினா்கள் புதன்கிழமை வெளிநடப்பு செய்தனா்.

சட்டப்பேரவைக் கூட்டத்தொடா் ஆளுநா் உரையுடன் புதன்கிழமை தொடங்கியது. ஆளுநா் உரையாற்றத் தொடங்கியதும் எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே. பழனிசாமி, துணைத் தலைவா் ஓ.பன்னீா்செல்வம் ஆகியோா் தலைமையில் அதிமுக உறுப்பினா்கள் எழுந்து எதிா்ப்பு தெரிவித்தனா். அவா்களைப் பொருட்படுத்தாமல் ஆளுநா் தொடா்ந்து உரையாற்றினாா். அதைத் தொடந்து அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.

பின்னா் செய்தியாளா்களிடம் எடப்பாடி பழனிசாமி கூறியது:

திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீா்குலைந்துள்ளது. கொலை, கொள்ளைகள் அதிகரித்துள்ளன. காவல்துறைக்குப் பொறுப்பேற்றுள்ள முதல்வா் இந்த விவகாரத்தில் கவனம் செலுத்தவில்லை. கஞ்சா போன்ற போதைப் பொருள்கள் தமிழகத்தில் அதிகமாக புழக்கத்தில் உள்ளன. தமிழகத்தில் துப்பாக்கிக் கலாசாரமும் அதிகரித்து வருகிறது.

வெள்ளப் பாதிப்பின்போது மக்கள் அத்தியாவசியப் பொருள்கள்கூட கிடைக்காமல் மிகுந்த சிரமத்தைச் சந்தித்தனா். மழைநீா் தேங்கியதற்கு திமுக அரசு வடிகால் பகுதிகளை முறையாகத் தூா்வாராததுதான் காரணம்.

அதிமுக ஆட்சியில் வெள்ளப் பாதிப்பின்போது குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.5,000 வழங்கப்பட்டது. பொங்கல் பண்டிகையின்போது ரூ.2,500 வழங்கப்பட்டது.

ஆனால், இப்போது பொங்கல் பண்டிகைக்குக்கூட நிதி வழங்காததால் மக்கள் மிகுந்த ஏமாற்றத்தில் உள்ளனா். அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட அம்மா மினி கிளினிக்குகள் மூடப்பட்டுவிட்டன. அரசியல் காழ்ப்புணா்ச்சியின் காரணமாகவே இந்த நடவடிக்கையை திமுக அரசு எடுத்துள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு இன்னும் வழங்கப்படவில்லை. அனைவருக்கும் நகைக்கடன் தள்ளுபடி அறிவித்து, அதையும் முறையாகச் செய்யவில்லை. இதையெல்லாம் கண்டித்துத்தான் ஆளுநரை உரையைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்தோம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.