தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

வெள்ளி, சனி, ஞாயிறுகளில் வழிபாட்டுத் தலங்களில் அனுமதி இல்லை

தமிழகத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு தினங்களில் வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

News image

கோப்புப்படம்

Updated On :5 ஜனவரி 2022, 11:21 am

தமிழகத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு தினங்களில் வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஒமைக்ரான் வகை கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நாடு முழுவதும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில், தமிழகத்திலும் கரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகளை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

இந்த புதிய கட்டுப்பாடுகள் நாளை முதல் அமலுக்கு வருகின்றன. நாளை(ஜன.6) முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. ஞாயிறுகளில் முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. 

மேலும், தமிழகத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு தினங்களில் வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.