தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் ஜனவரி 6, 7 ஆகிய இரு நாள்களுக்கு மட்டும் சட்டப்பேரவைக்கூட்டம் நடைபெறும் என்று அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால், இரண்டு நாள்களுக்கு மட்டும் சட்டப்பேரவைக் கூட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது நாளை, நாளை மறுநாள் விவாதம் நடத்தப்படுகிறது.
கேள்வி நேரம் நேரடி ஒளிபரப்பு
சட்டப்பேரவையில் ஆளுநர் உரையின் மீதான முதல்வரின் பதிலுரை நேரலை செய்யப்படும் என்று சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்துள்ளார்.
சென்னை கலைவாணர் அரங்கில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கரோனா பரவும் வேகம் அதிகரித்து வருவதால், இரண்டு நாள்களுக்கு மட்டும் சட்டப்பேரவைக் கூட்டம் நடத்தப்படுகிறது என்று கூறினார்.
மேலும் பேசிய அவர், மறைந்த சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு நாளை இரங்கல் குறிப்பு வாசிக்கப்படும்.
கேள்வி பதில் நேரத்துடன் சட்டப்பேரவை தொடங்கும். சட்டப்பேரவையில் கேள்வி நேரம் மட்டும் நேரலை செய்யப்படும். பதிலளிப்பதையும் நேரலை செய்வதற்கு போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படு வருகிறது.
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து முதல்வர் வெள்ளிக்கிழமை பதிலுரை வழங்குவார். அதனுடன் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நிறைவடையும் என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 42 காசுகள் சரிந்து ரூ.91.50 ஆக நிறைவு!

ஒருநாள், டெஸ்ட் தொடர்களுக்காக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆப்கானிஸ்தான்!

சமூக ரீதியாக பின்தங்கியுள்ளது குஜராத்: ஜான் பிரிட்டாஸ்

நாளை சந்திர கிரகணம்! திருப்பதி முதல் சிறுவாபுரி வரை கோயில்கள் திறந்திருக்கும் நேரம்!
வீடியோக்கள்

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பின் திருமாவளவன் பேட்டி! | Thirumavalavan | DMK | VCK
தினமணி வீடியோ செய்தி...

காற்றில் ஊழல் செய்த கட்சி திமுக: எடப்பாடி பழனிசாமி | Edappadi Palaniswami
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | சஹிப்ஸதா ஃபர்ஹான் மட்டும் அடித்தால் போதுமா?: கோட்டைவிட்ட பாகிஸ்தான்! | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

உறுதியாகும் பாஜக தொகுதிகள் ? | Admk | Bjp | Modi in madurai | Thiruparankundram visit | EPS
தினமணி வீடியோ செய்தி...

