நீட் வேண்டாம்; இரு மொழிக்கொள்கை தொடரும்: பேரவையில் 43 நிமிட ஆளுநர் உரை

தமிழகத்தில் தொடர்ந்து இரு மொழிக்கொள்கை கடைபிடிக்கப்படும் என்று சட்டப்பேரவையில் ஆளுநர் தமது உரையில் தெரிவித்துள்ளார். 
ஆளுநர் ஆர்.என்.ரவி
ஆளுநர் ஆர்.என்.ரவி

தமிழகத்தில் தொடர்ந்து இரு மொழிக்கொள்கை கடைபிடிக்கப்படும் என்று சட்டப்பேரவையில் ஆளுநர் தமது உரையில் தெரிவித்துள்ளார். 

சென்னை கலைவாணர் அரங்கில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் பேரவைக் கூட்டத்தொடர் தொடங்கியது. காலை 10 மணிக்கு உரையைத் தொடங்கிய அவர், 43 நிமிடங்கள் உரையாற்றினார். 

உரையில் ஆளுநர் தெரிவித்ததாவது, முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தத் தேவையான முயற்சிகளை அரசு மேற்கொள்ளும்.

மேக்கேதாட்டுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அனுமதி தரக்கூடாது.

புத்தாண்டில் மக்கள் நலமும் வளமும் பெற்று மகிழ்வுடன் வாழ வாழ்த்துகள்.

அண்டை மாநிலங்களுடன் நல்லுறவு இருக்கும் அதே நேரத்தில் நமது உரிமையை விட்டுக்கொடுக்க மாட்டோம்.

145 பெரியார் சமத்துவபுரங்களை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மாநிலத்தின் வளர்ச்சிக்கு சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் முக்கியப் பங்காற்றுகின்றன. 

புதிய அரசில் முதல்வரின் காப்பீடு திட்டத்தின் கீழ் ரூ.387 கோடி மதிப்பில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

நம்மை காக்கும் 48 திட்டத்தின் கீழ் விபத்துக்குள்ளான 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கிகிச்சை அளிக்கப்படுகிறது.

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தத் தேவையான முயற்சிகளை அரசு மேற்கொள்ளும்.

இலங்கை சிறையில் இருக்கும் தமிழக மீனவர்களை மீட்க அரசு தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளும். மீனவர்களின் இயந்திர படகுகளில் தகவல் தொடர்பு கருவிகளை பொருத்த அரசு திட்டம் வகுக்கும் 

அரசின் சொத்துகளை மேலாண்மை செய்ய கணினிமயம் ஆக்கப்பட்ட அமைப்பு செயல்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.

சட்டப்பேரவையில் காலை 10 மணிக்கு தனது உரையைத் தொடங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி 43 நிமிடங்களுக்கு உரையாற்றினார்.

தமிழக சட்டப்பேரவையில் முதல்முறையாக இசைத்தட்டுக்கு பதில் தமிழ்த்தாய் வாழ்ந்து நேரடியாக பாட்டப்பட்டு பேரவை உரை தொடங்கப்பட்டது. தமிழக அரசின் இசைக்கல்லூரியை சேர்ந்த பணியாளர்கள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை பாடினர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com