மேக்கேதாட்டுவில் அணை கட்ட அனுமதிக்கக்கூடாது: ஆளுநர் உரை

மேக்கேதாட்டுவில் அணை கட்ட மத்திய அரசு அனுமதிக்கக்கூடாது என்று சட்டப்பேரவையில் ஆளுநர் ஆா்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
ஆா்.என்.ரவி
ஆா்.என்.ரவி

மேக்கேதாட்டுவில் அணை கட்ட மத்திய அரசு அனுமதிக்கக்கூடாது என்று சட்டப்பேரவையில் ஆளுநர் ஆா்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் புத்தாண்டின் முதல் கூட்டம் ஆளுநா்  உரையுடன் இன்று காலை 10 மணியளவில் தொடங்கியது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் சட்டப்பேரவை தொடங்கியது.

அப்போது அவர் பேசியதாவது, தடுப்பூசியை மக்கள் இயக்கமாக மாற்றி தடுப்பூசி பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக உயிரிழப்பு குறைந்துள்ளது.

கரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக உள்ளது. 

மழை வெள்ளத்தால் சாலைகள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் சேதங்களை சந்தித்துள்ளன.

முல்லைப் பெரியாறு அணையில் முழு கொள்ளளவு நீர்த்தேக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 68 பேரை விடுவிக்க மத்திய அரசு வலியுறுத்த வேண்டும்.

மேக்கேத்தாட்டுவில் கர்நாடகம் அணை கட்ட ஒருபோதும் மத்திய அரசு அனுமதிக்கக்கூடாது என்று கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com