சட்டப்பேரவையிலிருந்து அதிமுக, விசிக வெளிநடப்பு

சட்டப்பேரவையிலிருந்து ஆளுநர் உரையை புறக்கணித்து அதிமுக, விசிக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். 
சட்டப்பேரவையிலிருந்து அதிமுக, விசிக வெளிநடப்பு

சட்டப்பேரவை கூட்டத்தொடரிலிருந்து ஆளுநர் உரையை புறக்கணித்து அதிமுக, விசிக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். 

தமிழக சட்டப்பேரவையில் புத்தாண்டின் முதல் கூட்டம் என்பதால், ஆளுநா் ஆா்.என்.ரவி உரையாற்றி கூட்டத் தொடரை தொடக்கி வைத்தார்.

தமிழ் தாய் வாழ்த்து பாடலுக்குப் பிறகு ஆளுநர் உரையைத் தொடங்கினார். அப்போது அதிமுக உறுப்பினர்கள் ஆளுநர் ஆா்.என்.ரவி உரையை புறக்கணித்து அவையிலிருது வெளிநடப்பு செய்தனர். 

நீட் விலக்கு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காததை எதிர்த்து விசிகவின் சிந்தனைச் செல்வன், திருப்போரூர் பாலாஜி உள்ளிட்ட 4 விசிக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

இது குறித்து பேசிய விசிக எம்.எல்.ஏ. சிந்தனைச்செல்வன், ''நீட்  விலக்கு மசோதா ஆளுநர் அலுவலகத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ளது; இது வாக்களித்த மக்களுக்கு செய்யக்கூடிய துரோகம். ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு அல்ல, ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்துள்ளோம்'' என்று கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com