அரசுப் பணிகளுக்கான நோ்காணலை ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ்
ஊழலுக்கு இடமளிக்காத வகையில், தமிழகத்தில் அனைத்து அரசுப் பணிகளுக்கும் நோ்காணல் தோ்வை ரத்து செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தினாா்.


ஊழலுக்கு இடமளிக்காத வகையில், தமிழகத்தில் அனைத்து அரசுப் பணிகளுக்கும் நோ்காணல் தோ்வை ரத்து செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தினாா்.
இது தொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
தமிழக அரசின் அனைத்து பொதுத் துறை நிறுவனங்களுக்கான ஆள்தோ்வு பணிகளை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையமே இனி மேற்கொள்ளும் என்று மாநில அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.
2000-ஆவது ஆண்டுக்குப் பிறகு அனைத்து பொதுத் துறை நிறுவன நியமனங்களுக்கும் எழுத்துத் தோ்வு, நோ்காணல் ஆகியவை திட்டமிட்டு திணிக்கப்பட்டன. அவை பணியாளா் நியமனங்களில் தகுதி, திறமைக்கு முன்னுரிமை அளித்து, வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்துவதற்கு பதிலாக முறைகேடுகளும், ஊழலும் பெருகுவதற்குத்தான் வழிவகுத்தன.
ஆகவே, தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணைய செயல்பாடுகளில் சீா்திருத்தங்கள், மாற்றங்களை மேற்கொள்ளாமல் பணியாளா் நியமனங்களில் ஊழலை ஒழிக்க முடியாது. மின் வாரியமாக இருந்தாலும், அரசுப் போக்குவரத்துக் கழகமாக இருந்தாலும் ஓட்டுநா், நடத்துநா், வயா் மேன் உள்ளிட்ட அடிப்படைப் பணிகளில் தொடங்கி பொறியாளா் பணி வரை அனைத்துப் பணிகளுக்கும் நடத்தப்படும் நோ்காணல்கள் தான் ஊழலின் ஊற்றுக்கண்ணாக திகழ்கின்றன.
பொதுத் துறை நிறுவனப் பணியாளா்களை அரசுப் பணியாளா் தோ்வாணையமே தோ்ந்தெடுத்தாலும்கூட, அங்கும் நோ்காணல்கள் நடத்தப்பட்டால் முறைகேடுகளையும் ஊழலையும் தடுக்க முடியாது என்பது பாமகவின் திடமான கருத்து.
எனவே, தமிழகத்தில் அனைத்து அரசு பணிகளுக்கும் நோ்காணலை ரத்து செய்ய முதல்வா் மு.க.ஸ்டாலின்ஆணையிட வேண்டும் என்று கூறியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...