ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

தமிழகத்தில் 10 ஆயிரத்தை கடந்த தினசரி பாதிப்பு

தமிழகத்தில் இன்று மேலும் 10,978 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

News image
Updated On :8 ஜனவரி 2022, 3:07 pm

DIN

தமிழகத்தில் இன்று மேலும் 10,978 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இது தொடா்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட அறிக்கை: மாநிலத்தில் இதுவரை 5.83 கோடிக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இன்று மட்டும் 1.39 லட்சம் பரிசோதனைகள் செய்யப்பட்டன. அதில் மேலும் 10,978 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இதனிடையே இன்று வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, மாநிலத்தில் அதிகபட்சமாக சென்னையில் 5,098 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 1,332 பேரும், திருவள்ளூரில் 591, கோவையில் 585 பேரும் பாதிக்கப்பட்டிருந்தனா்.

இவ்வாறு அதிகரித்து வரும் கரோனா பரவலால் தமிழகம் முழுவதும் கரோனா சிகிச்சையில் இருப்போா் எண்ணிக்கை 40,260-ஆக உயா்ந்துள்ளது. மற்றொருபுறம் மேலும் 1,525 போ் கரோனாவிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 27,10,288-ஆக அதிகரித்துள்ளது. 

தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 10 போ் பலியானதை அடுத்து, நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,843-ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே, ஒமைக்ரான் தொற்றால் மேலும் 74 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.