
நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் இலக்கு என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு தொடர்பான சட்டப்பேரவை அனைத்துக் கட்சிக் கூட்டம் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் தொடங்கியது.
கூட்டத்தின் தொடக்க உரையில் முதல்வர் பேசியது:
"திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முதலில் இந்தியப் பிரதமரை கடந்தாண்டு ஜூன் 17-ம் தேதி நேரில் சந்தித்து நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தேன். நம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் வலியுறுத்தியிருக்கிறார்கள்.
இந்த நிலையில், நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கும் சட்ட முன்வடிவை கடந்தாண்டு செப்டம்பர் 13-ம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றினோம்.
இதையும் படிக்க | உயர்நீதிமன்ற கிளையில் நீதிபதி உள்பட 8 பேருக்கு கரோனா
அந்த சட்டமுன்வடிவை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக மாநில ஆளுநருக்கு அனுப்பி வைத்தோம். ஆனால், அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் வைத்திருக்கிறார் ஆளுநர்.
சட்டத்தை நிறைவேற்றும்போது ஆளுநர் அதை மதித்து ஒப்புதல் அளிப்பதுதான் மக்களாட்சித் தத்துவம். எனவே, நான் ஆளுநரை நேரில் சந்தித்து வலியுறுத்தியும் குடியரசுத் தலைவருக்கு அவர் அனுப்பவில்லை.
மாநில உரிமையும், சட்டப்பேரவையின் சட்டம் இயற்றும் அதிகாரமும் கேள்விக்குறியாகும் சூழல் உருவானதால்தான் அவசரமாக, அவசியத்துடன் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியுள்ளோம்.
இங்கே மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர், ஒரு வரைவுத் தீர்மானத்தை எடுத்துரைப்பார். அனைவரின் இலக்கும் நீட் தேர்வுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும், தமிழ்நாடு மாணவர்களின் நலனைக் காப்பாறிட வேண்டும் என்பதுதான்.
ஆகவே, வரைவுத் தீர்மானம் மீது ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்க வேண்டும்" என்றார் முதல்வர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.