முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவ வல்லுநர்களுடன் நாளை ஆலோசனை
முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவ வல்லுநர்களுடன் நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.


முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவ வல்லுநர்களுடன் நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.
ஒமைக்ரான் கரோனா தொற்றை தடுக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. மேலும் ஜனவரி 6ஆம் தேதி முதல் இரவு நேர முடக்கம் மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு பொது முடக்கம் அமல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, தமிழகம் முழுவதும் இன்று முழு பொது முடக்கம் உத்தரவு அமலில் உள்ளது. இதனிடயே தமிழக அரசு அறிவித்துள்ள கரோனா கட்டுப்பாடுகள் நாளையுடன் முடிவுக்கு வருகிறது. இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவ வல்லுநர்களுடன் நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.
தலைமை செயலகத்தில் நாளை காலை 11 மணிக்கு நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் கட்டுப்பாடுகளை நீட்டிப்பதா அல்லது கூடுதல் கட்டுப்பாடுகளை விதிப்பதா என்பது குறித்து ஆலோசிக்க உள்ளார்.
இதில் மருத்துவத்துறை செயலாளர், பொது சுகாதாரத்துறை இயக்குனர், மருத்துவக்கல்வி இயக்குனர் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...