சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஸ்ரீ வீர அழகர் கோயிலில் வியாழக்கிழமை அதிகாலை வைகுந்த ஏகாதசியை முன்னிட்டு பரமபத வாசல் திறக்கப்பட்டது.
மானாமதுரை ஸ்ரீ வீர அழகர் கோயிலில் நடைபெற்ற வைகுந்த ஏகாதசி விழாவை முன்னிட்டு உற்சவர் சுந்தரராஜ பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெற்று ஸ்ரீதேவி பூதேவி சமேதமாய் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் கோயில் மண்டபத்தில் எழுந்தருளினார். அதைத்தொடர்ந்து காலை 5:30 மணிக்கு பரமபதவாசல் திறக்கப்பட்டதும் சுந்தரராஜ பெருமாள், கோயில் மண்டபத்திலிருந்து பரமபதவாசல் வழியாக புறப்பாடாகி வந்தார்.

அதன்பின் கோயில் உள்பிரகாரத்தில் பரமபத வாசலில் காத்திருந்த நம்மாழ்வர் பெருமானுக்கு சுந்தரராஜ பெருமாள் காட்சி தந்தார். பரமபத வாசலில் புறப்பாடாகி வந்த பெருமாளுடன் வந்த பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என பக்தி பரவசத்துடன் கோஷம் எழுப்பினர். அதன்பின் சுந்தரராஜ பெருமாள் கோயில் உள் பிரகாரத்தை வலம் வந்து சௌந்தரவல்லித் தாயார் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
நம்மாழ்வார் பெருமான் சுந்தரராஜ பெருமாள் மூலவர் சன்னதியில் எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்து சுந்தரராஜ பெருமாளை தரிசனம் செய்தனர். மானாமதுரை புரட்சியார் பேட்டை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ தியாக வினோதப் பெருமாள் கோயிலிலும் சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது. இங்கும் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அடுத்த 3 மணி நேரத்துக்கு 19 மாவட்டங்களில் மழை!

புல்வாமா தாக்குதல் நடத்திய பயங்கரவாதி மர்ம மரணம்!
வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்

நரசிம்மர் ஜெயந்தி: பூவரசன்குப்பம்லட்சுமி நரசிம்மர் கோயிலில் சிறப்பு வழிபாடு!
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


