வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

புதுவையில் அச்சுறுத்தும் கரோனா: ஒரே நாளில் 1,213 பேருக்கு தொற்று; இருவர் பலி

புதுவை மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேற்கொண்ட கரோனா பரிசோதனையில், புதுச்சேரியில் 1,100 நபர்களுக்கும், காரைக்காலில் 93 பேர், ஏனாமில் 3 பேரும், மாஹேவில் 17 பேர் என  மொத்தம் 1,213 நபர்கள் கரோனா தொற

News image
புதுவையில் அச்சுறுத்தும் கரோனா: ஒரே நாளில் 1,213 பேருக்கு தொற்று; இருவர் பலி
Updated On :15 ஜனவரி 2022, 8:38 am

DIN

புதுச்சேரி:  புதுவை மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேற்கொண்ட கரோனா பரிசோதனையில், புதுச்சேரியில் 1,100 நபர்களுக்கும், காரைக்காலில் 93 பேர், ஏனாமில் 3 பேரும், மாஹேவில் 17 பேர் என  மொத்தம் 1,213 நபர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

மாநிலத்தில் தற்போது  6,785 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். தோற்று பாதித்த இருவர் உயிரிழந்துள்ளதால், மொத்தம் பலி எண்ணிக்கை 1,886 ஆனது.

மேலும் மாநிலத்தில் இதுவரை 1,27,879 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1,36,550 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கரோனா தடுப்பூசி முதல் தவணை 9,05,903 பேரும், இரண்டாம் தவணை 5,88,020 பேரும் செலுத்தியுள்ளனர்.

மொத்தமாக 14,95,877 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். புத்தாண்டு முதல் கரோனா தொற்று அதிகரித்து வருவதால் அச்சம் ஏற்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.