தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பென்னி குயிக் பிறந்தநாள்: ஆட்சியர், எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை

முல்லைப் பெரியாறு அணை கட்டிய கர்னல் ஜான் பென்னி குயிக் 181 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் சனிக்கிழமை மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

News image

முல்லைப் பெரியாறு அணை கட்டிய பொறியாளர் பென்னிகுக் 181 ஆவது பிறந்தநள்  ஆட்சியர் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மாலை அணிவித்து மரியாதை

Updated On :15 ஜனவரி 2022, 5:54 am

DIN

கம்பம்: முல்லைப் பெரியாறு அணை கட்டிய கர்னல் ஜான் பென்னி குயிக் 181 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் சனிக்கிழமை மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

தேனி மாவட்டம் லோயர் கேம்ப்பில் முல்லைப் பெரியாறு அணை கட்டிய ஆங்கிலேய பொறியாளர் கர்னல் ஜான்பென்னிகுயிக் 181 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

முல்லைப் பெரியாறு அணை கட்டிய இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஆங்கிலேய பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுயிக் மணிமண்டபத்தில் இன்று அரசு விழாவாக கொண்டாடப்பட்டது.

கரோனா தொற்று பரவல் காரணமாக அரசு விழாவில் வேறு எந்த நிகழ்வுகளும் அனுமதிக்கப்படவில்லை.

மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளிதரன் தலைமை தாங்கினார், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கம்பம் என்.ராமகிருஷ்ணன், ஆண்டிபட்டி ஆ.மகாராஜன், பெரியகுளம் கே. எஸ். சரவணகுமார், வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தங். தமிழ்ச்செல்வன் ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். ஏற்பாடுகளை பொதுப்பணித் துறையினர் செய்திருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.