மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

தமிழகத்தில் வரும் 22ஆம் தேதி மெகா தடுப்பூசி முகாம்

தமிழகத்தில் வரும் சனிக்கிழமை ஜனவரி 22ஆம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

News image
நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்
Updated On :16 ஜனவரி 2022, 6:52 am

DIN


சென்னை: தமிழகத்தில் வரும் சனிக்கிழமை ஜனவரி 22ஆம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியதாவது, தமிழகத்தில் வரும் 22ஆம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் சுமார் 50 ஆயிரம் மையங்களில் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

நந்தம்பாக்கம் கரோனா சிகிச்சை மையத்தில் மொத்தம் 700 படுக்கைகள் உள்ளன. நந்தம்பாக்கம் மையத்தில் தற்போது கரோனா நோயாளிகள் 90 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மேலும், மொத்தமுள்ளவற்றில் 350 படுக்கைகள் காவல்துறையினர், அரசு ஊழியர்கள், அதிகாரிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.