நாகை, திருவாரூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் நாகை, திருவாரூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தமிழகத்தில் நாகை, திருவாரூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாவது:
நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, தேனி, தென்காசி, நெல்லை,கன்னியாகுமரி, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே காணப்படும்.
இன்றும் நாளையும் நீலகிரி, கோவை, சேலம், திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் மலைப் பகுதிகளில் அதிகாலை நேரங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
சென்னையைப் பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29 குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...