மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை தேர்வு செய்ய குழு அமைப்பு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்ய கட்சியின் பொதுச் செயலாளர் சந்திரசேகரன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. 

News image
சீமான்
Updated On :28 ஜனவரி 2022, 8:10 am

DIN

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்ய கட்சியின் பொதுச் செயலாளர் சந்திரசேகரன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 128 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள், 649 நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற பிப்ரவரி 19 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. 

இதையடுத்து வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. அந்தவகையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. 

நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடவிருக்கும் வேட்பாளர்களை தேர்வு செய்து வேட்புமனுத் தாக்கல், தேர்தல் பரப்புரை உள்ளிட்ட தேர்தல் களப்பணிகளை மேற்பார்வை செய்வதற்காக பொதுச் செயலாளர் சந்திரசேகரன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.