இந்தச் சூழ்நிலையில், பெரம்பலூர் மாவட்டம், நாரணமங்கலம் ஈச்சங்காடு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சுப்பிரமணி தமது வீட்டின் பின்புறம் மலைப் பகுதியில் துப்பாக்கி சுடும் மையம் செயல்படுவதாகவும், இரண்டு நாள்களுக்கு முன்பு இந்த வீட்டின் கூரைப்பகுதியில் இருந்து ஏதோ சத்தம் கேட்டதாகவும், இந்த நிலையில் கூரைப் பகுதியில் துளை ஏற்பட்டதையும், அதிலிருந்து வெளிச்சம் ஊடுருவியதையும் கண்டதும் ஏறிப் பார்த்ததில் அங்கு ஒரு துப்பாக்கி குண்டு கிடந்ததாகவும், இதுகுறித்து வருவாய்த் துறையினருக்கு தகவல் தெரிவித்ததாகவும் பத்திரிகையில் செய்தி வந்துள்ளது. இந்நிலையில் அதே வீட்டின் மற்றொரு பகுதியிலிருந்து மேலும் ஒரு தோட்டாவை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளதாக செய்தி வந்துள்ளது.