தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

புதுச்சேரியில் பிப். 4 முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு

புதுச்சேரியில் பிப்ரவரி 4 ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :31 ஜனவரி 2022, 5:00 pm

புதுச்சேரியில் பிப்ரவரி 4 ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வாரத்தில் 6 நாள்களும் முழுமையாக இயங்கும் என புதுச்சேரி கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார்.

கரோனா பரவல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பொதுமுடக்கம் விதிக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. 

எனினும் தொற்று பரவல் கட்டுக்குள் சற்று குறைந்துள்ளதைத் தொடர்ந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி சமீபத்தில் கோயில்கள் திறக்கப்பட்டன. 

தமிழகத்தில் பள்ளி கல்லூரிகள் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் திறக்கப்படவுள்ளன. அதன்படி பிப்ரவரி 4ஆம் தேதி முதல் புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவுள்ளதாக புதுச்சேரி பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.