இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்பட்ட தமிழகம், காரைக்கால் மீனவர்கள் 12 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த ஜூன் 30 ஆம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
அவா்கள், கோடியக்கரைக்கு தென்கிழக்கே ஞாயிற்றுக்கிழமை இரவு மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடிப்பதாகக் கூறி, 12 பேரையும் கைதுசெய்தனர்.
இதையும் படிக்கலாம்: ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே துப்பாக்கிச் சூட்டில் பலி?
அவா்களின் படகையும் பறிமுதல் செய்து இலங்கையில் உள்ள மைலிட்டி துறைமுகத்துக்கு கொண்டுசென்றனா். பின்னர், திங்கள்கிழமை பருத்தித்துறை நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்டு, யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையடுத்து, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழகம், காரைக்கால் மீனவர்கள் 12 பேரை பருத்தித்துறை நீதிமன்றம் இன்று விடுதலை.செய்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சபலென்காவை சாய்த்தாா் பாப்டிஸ்ட்

டிவிட்டா் முன்னாள் சிஇஓ தொடங்கிய ஏ.ஐ. நிறுவன மதிப்பு 200 கோடி டாலா்!

இன்று 6 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு

தொல்.திருமாவளவன் மீதான வழக்கு ரத்து
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

