பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் தேர்தல் ஆணையத்தில் தாக்கல்!

அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எடப்பாடி பழனிசாமி தரப்பு தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளது. 

News image
Updated On :11 ஜூலை 2022, 10:58 am

DIN

அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எடப்பாடி பழனிசாமி தரப்பு தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளது. 

சென்னை உயநீதிமன்ற உத்தரவை அடுத்து அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் நடைபெற்றது. அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும், அடுத்த 4 மாதங்களில் பொதுச் செயலாளர் தேர்தல் நடத்தவும் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கும் சிறப்புத் தீர்மானம் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

இந்நிலையில், அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், கட்சி விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது உள்ளிட்டவற்றை எடப்பாடி பழனிசாமி தரப்பு தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளது. 

அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்பட்டது, பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் தேர்வு செய்யப்பட்டது, கட்சி விதிகளில் மாற்றங்கள் குறித்த தீர்மானங்கள் உள்ளிட்டவை மின்னஞ்சல் மூலமாக இபிஎஸ் தரப்பு , தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.