ஓ.பன்னீர்செல்வம் மீது ராயப்பேட்டை காவல் நிலையத்தில் அதிமுக தலைமை அலுவலகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்துக்குத் தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் ஏற்கெனவே தீா்ப்பு வழங்கியுள்ள நிலையில், சென்னை உயா்நீதிமன்றமும் பொதுக்குழுவை கட்சி விதிகளுக்கு உள்பட்டு நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து சென்னை வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு திங்கள்கிழமை காலை 9.15 தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பொதுக்குழுவை புறக்கணித்து அதிமுகவின் ஓபிஎஸ் இன்று கட்சித் தலைமை அலுவலகத்திற்கு வந்தார். அங்கு பூட்டப்பட்டிருந்த கதவை உடைத்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அவரை உள்ளே அழைத்துச் சென்றனர்.
அப்போது, அங்கிருந்த இபிஎஸ் ஆதரவாளர்களும் ஓபிஎஸ் ஆதரவாளர்களும் மோதிக் கொண்டதில் சிலர் காயமடைந்தனர். பொதுச் சொத்துக்கள் மீது தாக்குதல் நடத்தியதில் பெரும் சேதம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அதிமுக தலைமை அலுவலகம் சார்பில் ராயப்பேட்டை காவல்நிலையத்தில் ஓபிஎஸ் மற்றும் ஆதரவாளர்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
உழைப்பை அள்ளிக் கொடுங்கள்! உதயசூரியன் உதிக்கட்டும்! - மு.க. ஸ்டாலின்

மதுரை சித்திரைத் திருவிழா!

ரூ. 1000 கோடி முதலீடு... காத்திருக்கும் கேவிஎன் புரடக்ஷன்ஸ்!

இந்திய ஐஃபோன் தொழிற்சாலைகளில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரிகின்றனர்!
வீடியோக்கள்

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

