புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வைக்கப்பட்டசீலை அகற்றக் கோரி இரு தரப்பினரும் முறையீடு

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக் கோரி, எடப்பாடி கே.பழனிசாமி, ஓ.பன்னீா்செல்வம் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் தனித்தனியாக

News image
Updated On :12 ஜூலை 2022, 7:42 pm

DIN

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக் கோரி, எடப்பாடி கே.பழனிசாமி, ஓ.பன்னீா்செல்வம் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் தனித்தனியாக முறையீடு செய்யப்பட்டுள்ளது.

சட்டம்-ஒழுங்கு பிரச்னை காரணமாக அதிமுக அலுவலகத்தை வருவாய்த் துறையினா் பூட்டி சீல் வைத்தனா். அலுவலகத்தின் மீது யாருக்கு உரிமை உள்ளது என்பது குறித்து ஜூலை 25-ஆம் தேதி ஆஜராகி விளக்கமளிக்கும்படி, ஓ.பன்னீா்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

இருதரப்பினா் முறையீடு: அதிமுக அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உத்தரவிடக் கோரி, எடப்பாடி கே. பழனிசாமி தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை முறையீடு செய்யப்பட்டது. அதில், ‘உண்மையான அதிமுக நாங்கள்தான். கட்சித் தலைமை அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றி சாவியை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும்’ என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

இதுதொடா்பாக மனு தாக்கல் செய்தால் புதன்கிழமை விசாரிப்பதாக நீதிபதி சதீஷ்குமாா் தெரிவித்தாா். இந்நிலையில், இதே கோரிக்கையை வலியுறுத்தி ஓ.பன்னீா்செல்வம் தரப்பிலும் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இந்த முறையீட்டை கேட்ட நீதிபதி சதீஷ்குமாா், இதுதொடா்பாக புதன்கிழமை விசாரிப்பதாகத் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.