பிரிந்து கிடக்கும் கட்சியை (அதிமுக) ஒன்றிணைப்பதே என் பணி என்றார் வி.கே. சசிகலா.
தஞ்சாவூரில் சசிகலாவுடன், திவாகரன் தலைமையிலான அண்ணா திராவிடர் கழக இணைப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் சசிகலா பேசியது:
எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு அதிமுக பிளவை சந்தித்தது. அன்றைக்கு அதிமுகவுக்கு இனி எதிர்காலம் இல்லை என்றும், அதிமுகவின் கதை முடிந்துவிட்டது எனவும் எத்தனையோ பேர் கூறினர். அந்தக் கனவோடுதான் முன்னாள் முதல்வர் கருணாநிதியும் இருந்தார். ஆனால், அவர்களுடைய கனவை மொத்தமாகக் கலைத்தோம்.
ஒரு பிரிந்த கட்சியை எப்படிச் சேர்ப்பது என்ற கலையை நான் தெளிவாகக் கற்றுக் கொண்டேன். எனவே, அனைவரையும் ஒன்றுபடுத்தி, கட்சியை வெற்றிப் பாதைக்குக் கொண்டு செல்வதே என் எஞ்சியுள்ள வாழ்க்கையின் லட்சியமாகக் கருதுகிறேன்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு 2016 டிசம்பர் மாதம் வரை நடைபெற்ற பொதுக் குழுக்கள்தான் உண்மையானவை. அந்த பொதுக் குழுக்கள்தான் கட்சியின் சட்ட விதிகளின்படி முறையாக அழைப்புக் கொடுத்து, ஒட்டுமொத்த தொண்டர்களின் ஒத்துழைப்புடன் நடைபெற்றது. அதன்பிறகு நடைபெற்றதாக சொல்லப்படும் பொதுக் குழுக்கள் அனைத்தும் நிர்வாகிகள் கூட்டமாகத்தான் தொண்டர்கள் பார்க்கின்றனர்.
அதிமுக வரலாற்றிலேயே இதுபோன்று ஆண்டுக்கு ஒரு முறை கட்சியின் சட்ட விதிகளை யாருமே மாற்றியதில்லை. இவர்கள் செய்கிற பணிகள் அனைத்துமே சட்டப்படி செல்லாது. இதற்கெல்லாம் விரைவில் நல்ல தீர்வு ஏற்படும் என்றார் சசிகலா. இவ்விழாவில் வி.கே. திவாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
டிரம்ப்பின் நீரிணை! ஹோர்முஸை பெயர்மாற்றம் செய்து அமெரிக்க அதிபர் வெளியிட்ட வரைபடம்!

970 கோல்கள்: கோப்பை இல்லையென கிண்டல் செய்தவர்களுக்கு சைகையில் பதிலளித்த ரொனால்டோ!

தனுஷ் - விக்னேஷ் ராஜா கூட்டணி வெல்லுமா? கர - திரை விமர்சனம்!

புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

