துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

திருப்பூரில் சொத்து தகராறில் தொழிலாளி கொலை: தம்பி தலைமறைவு

திருப்பூர் மாஸ்கோ நகர் 2வது வீதியை சேர்ந்தவர் சாமிநாதன். இவரது மகன்கள் நாகராஜ்(28) , கார்த்திக் (26). இருவருக்கும் திருமணம் ஆகவில்லை. இருவரும் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர்.

News image
திருப்பூரில் சொத்து தகராறில் தொழிலாளி கொலை: தம்பி தலைமறைவு
Updated On :12 ஜூலை 2022, 8:03 am

DIN

திருப்பூர்: திருப்பூர் மாஸ்கோ நகர் 2வது வீதியை சேர்ந்தவர் சாமிநாதன். இவரது மகன்கள் நாகராஜ்(28) , கார்த்திக் (26). இருவருக்கும் திருமணம் ஆகவில்லை. இருவரும் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர்.

இந்த நிலையில் நாகராஜ் பெயரில் இரண்டு சென்ட் இடம் மாஸ்கோ நகரில் உள்ளது. அந்த இடத்தை தனது பெயருக்கு எழுதித் தரும்படி தம்பி கார்த்திக் கேட்டுள்ளார். ஆனால் நாகராஜ் எழுதிக் கொடுக்கவில்லை என தெரிகிறது.நேற்று இரவு வேலை முடிந்து வந்த இருவரும் வீட்டில் இருந்து மது அருந்தி உள்ளனர். அப்போது கார்த்திக் மீண்டும் நாகராஜிடம் இடத்தை தனது பெயருக்கு எழுதி கேட்டுள்ளார். 

இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறி உள்ளது. இதில் ஆத்திரமடைந்த கார்த்திக் வீட்டில் முன்புறம் கிடந்த கட்டையால் அண்ணன் நாகராஜை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த நாகராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த கார்த்திக் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இன்று காலை நாகராஜ் பிணமாக கிடைப்பதை பார்த்த அப்பகுதி மக்கள் திருப்பூர் வடக்கு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அண்ணனை கொலை செய்து விட்டு தப்பி ஓடிய தம்பி கார்த்திக்கை தேடி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.