நீலகிரி, கோவையில் இன்றும் மிகக் கனமழைக்கு வாய்ப்பு
நீலகிரி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் இன்றும் மிகக் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


நீலகிரி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் இன்றும் மிகக் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில்,
மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,
நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்றும் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தேனி, திண்டுக்கல், தென்சாசி ஆகிய மாவட்டத்தில் அடுத்த இரண்டு நாள்களுக்கு கனமழை பெய்யக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கூடலூர் ஆகிய மாவட்டங்களில் 15 செ.மீட்டருக்கு மேல் மழை பதிவாகியுள்ளது.
இதையும் படிக்கலாம்: ஒசூரில் 3 ஆயிரம் சிறு குறுந்தொழில் நிறுவனங்கள் கதவடைப்பு, ஆர்ப்பாட்டம்
சென்னையை பொருத்தவரை
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...