புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

சென்னை விமான நிலையத்தில் ரூ.1.37 கோடி தங்கம், மின்னணு பொருட்கள் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ரூ.1.37 கோடி மதிப்புள்ள தங்கம், மின்னணு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

News image
Updated On :16 ஜூலை 2022, 4:21 pm

DIN

சென்னை விமான நிலையத்தில் ரூ.1.37 கோடி மதிப்புள்ள தங்கம், மின்னணு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

துபையில் இருந்து கடந்த 14-ஆம் தேதி சென்னை வந்த கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த மணி என்பவரிடம் விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் இடைமறித்து விசாரணை நடத்தியதில், ஆசன வாயில் மறைத்து எடுத்து வந்த 1.25 கிலோ எடை கொண்ட தங்கப்பசையை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.55.38 லட்சம் ஆகும்.

இதேபோல துபையில் இருந்து வந்த சென்னையைச் சேர்ந்த தமீம் அப்துல் ரஹ்மான், திருச்சியைச் சேர்ந்த முகமது ஹபீபுல்லா என்னும் இரண்டு பயணிகளிடம் நடத்திய விசாரணையில், ஆசன வாயில் மறைத்து எடுத்து வந்த 1.425 கிலோ தங்கப்பசை, தங்கச் சங்கிலிகள், சுங்க அதிகாரிகளிடம் தெரிவிக்காமல் மறைத்து எடுத்து வந்த மின்னணு பொருட்கள், குங்குமப்பூ, சிகரெட்டுகள் ஆகிவற்றை பறிமுதல் செய்தனர். 

தங்கத்தின் மதிப்பு ரூ.62.81 லட்சம். மற்ற பொருட்களின் மதிப்பு ரூ. 18.97 லட்சம். இதையடுத்து மூன்று பயணிகளும் கைது செய்யப்பட்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.