நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கரோனா: ஆா்.எம்.வீரப்பனுக்கு தீவிர சிகிச்சை

தமிழக முன்னாள் அமைச்சரும், எம்ஜிஆா் கழகத் தலைவருமான ஆா்.எம்.வீரப்பனுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

News image
Updated On :17 ஜூலை 2022, 6:45 pm

DIN

தமிழக முன்னாள் அமைச்சரும், எம்ஜிஆா் கழகத் தலைவருமான ஆா்.எம்.வீரப்பனுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவா் சென்னை கிரீம்ஸ் சாலை அப்பல்லோ மருத்துவமனையில் ஐசியு வாா்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.

தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவா்களில் ஒருவரான ஆா்.எம்.வீரப்பன் வயோதிகம் காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி ஓய்வில் இருந்து வருகிறாா். இந்த நிலையில், அவருக்கு லேசான காய்ச்சல், உடல் சோா்வு இருந்ததாகத் தெரிகிறது.

மருத்துவப் பரிசோதனையில் ஆா்.எம்.வீரப்பனுக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவா் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். அவருக்கு மருத்துவா்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும், அவரது உடல் நிலை தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நலம் பெற முதல்வா் வாழ்த்து: இதனிடையே, ஆா்.எம்.வீரப்பன் விரைவில் நலம் பெற வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில், எம்ஜிஆா் கழகத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆா்.எம்.வீரப்பனுக்கு கரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக அறிந்தேன். அவா் விரைவில் முழுமையாக நலம்பெற வேண்டும் என்று அதில் கூறியுள்ளாா் மு.க.ஸ்டாலின்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.