கள்ளக்குறிச்சி போராட்டம்: சிறப்புப் புலனாய்வுக் குழு அமைப்பு

கள்ளக்குறிச்சி கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் தாக்குதல் நடத்திய நபர்களைக் கண்டறிய சிறப்பு புலனாய்வுக் குழுவை தமிழகக் காவல்துறை நியமித்தது.
கள்ளக்குறிச்சி போராட்டம்: சிறப்புப் புலனாய்வுக் குழு அமைப்பு

கள்ளக்குறிச்சி கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் தாக்குதல் நடத்திய நபர்களைக் கண்டறிய சிறப்புப் புலனாய்வுக் குழுவை தமிழகக் காவல்துறை நியமித்தது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் இயங்கி வரும் தனியாா் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த மாணவி கடந்த வாரம் மாடியில் இருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்ட சம்பவத்தில் பல்வேறு மர்மங்கள் இருப்பதாக பெற்றோர் குற்றம்சாட்டி வருகிறார்கள். பெற்றோர் அமைதியாக போராட்டம் நடத்தி வந்த நிலையில், ஜூலை 17ஆம் தேதி நடைபெற்ற இளைஞா்களின் போராட்டம் பெரும் வன்முறையாக மாறியது.

அப்போது, போராட்டத்தில் ஈடுபட்ட பலரும் ஆவேசத்தில் அப்பள்ளி வாகனங்களைத் தீ வைத்து எரித்ததுடன் வகுப்பறைகளுக்குள் நுழைந்து அங்கிருந்த கண்ணாடிகளையும் அடித்து நொறுக்கினர். 

மேலும், அப்பள்ளி மாணவர்களின் ஆவணங்களையும் சான்றிதழ்களையும் தீ வைத்து எரித்துள்ளனர்.

இந்நிலையில், தமிழகத்தை உலுக்கிய இந்த வன்முறைப் போராட்டத்தில் ஈடுபட்ட கலவரக்காரர்களைக் கண்டறிய தமிழகக் காவல்துறை சேலம் சரக டிஜஜி பிரவீன்குமார் அபினபு தலைமையில் 5 பேர் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவை நியமித்துள்ளது. 

இக்குழு, மாணவி உயிரிழந்த விவகாரத்தில் வாட்ஸ்ஆப்பில் புதிதாக குழுக்களை உருவாக்கியவர்கள் மற்றும் பொய்யான செய்திகளைப் பரப்பியவர்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com