கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் இயங்கி வரும் தனியாா் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த மாணவி கடந்த வாரம் மாடியில் இருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்ட சம்பவத்தில் பல்வேறு மர்மங்கள் இருப்பதாக பெற்றோர் குற்றம்சாட்டி வருகிறார்கள். பெற்றோர் அமைதியாக போராட்டம் நடத்தி வந்த நிலையில், ஜூலை 17ஆம் தேதி நடைபெற்ற இளைஞா்களின் போராட்டம் பெரும் வன்முறையாக மாறியது.

வன்முறை நடைபெற்ற பள்ளியில் காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு, அமைச்சர்கள் எ.வ.வேலு, அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.

இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இதில், அமைச்சர்கள் எ.வ.வேலு, அன்பில் மகேஷ், உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டி, டிஜிபி சைலேந்திர பாபு உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

கரோனாவிலிருந்து மீண்டுள்ள முதல்வர் ஸ்டாலின், வீட்டில் ஓய்வெடுத்து வரும் நிலையில் காணொலி வாயிலாக இந்த கூட்டத்தில் பங்கேற்கிறார்.

இதில், பள்ளியில் நடந்த கலவரம், காவல்துறை நடவடிக்கை உள்ளிட்டவை குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com