காவிரி ஆணையம் மத்திய அரசின் ஏஜென்டாக செயல்படுகிறது: துரைமுருகன்

மத்திய நீர்வள ஆணையமும் காவிரி மேலாண்மை ஆணையமும் மத்திய அரசின் ஏஜென்டாகத்தான் செயல்படுவதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். 
அமைச்சர் துரைமுருகன்
அமைச்சர் துரைமுருகன்

மத்திய நீர்வள ஆணையமும் காவிரி மேலாண்மை ஆணையமும் மத்திய அரசின் ஏஜென்டாகத்தான் செயல்படுவதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். 

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், 

காவிரி மேலாண்மை ஆணையம் உருவாக்கியது, அதற்கு என்னென்ன அதிகாரங்கள் உள்ளது என்பதை நீதிமன்றம்தான் முடிவு செய்கிறது. ஆனால், காவிரி மேலாண்மை ஆணையம், மத்திய அரசின் ஆதரவு இருப்பதாகக் கருதிக்கொண்டு அவர்களுக்கேற்ப முடிவெடுக்கிறது. 

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் நாங்கள் தொடர்ந்த மனு மீதான விசாரணையில், அணை குறித்து விவாதிக்கக்கூடாது என்று நீதிமன்றம் சொல்லியிருப்பது வரவேற்கத்தக்கது. இந்த வழக்கு முடியும்வரை கூட்டங்கள் நடந்தாலும் மேக்கேதாட்டு குறித்து பேச முடியாது. கூட்டங்களில் வழக்கம்போல தமிழகத்தின் சார்பில் அதிகாரிகள் கலந்துகொள்வார்கள். 

மத்திய நீர்வள ஆணையமும் காவிரி மேலாண்மை ஆணையமும் நியாயமாக இல்லை, அவர்கள் மத்திய அரசின் ஏஜென்டாகத்தான் செயல்படுகிறார்கள். அடுத்த விசாரணையிலும் விரிவான வாதத்தை முன்வைப்போம்' என்று கூறினார். 

முன்னதாக, காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் அணை கட்ட கர்நாடக அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஆனால், மேக்கேதாட்டுவில் அணை கட்டும் கா்நாடக அரசின் முடிவு உச்சநீதிமன்றத் தீா்ப்புக்கு எதிரானது என்றும் மத்திய அரசு இதற்கு அனுமதி அளிக்கக் கூடாது என்றும் தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. 

இன்று நடைபெற்ற வழக்கின் விசாரணையில், ஜூலை  22-ம் தேதி நடைபெறவுள்ள காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேக்கேதாட்டு விவகாரம் குறித்து விவாதிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com