
சென்னை: நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதே தமிழக அரசின் இலக்கு என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மேலும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளார்களிடம் தெரிவித்ததாவது:
நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அனுப்பி உள்ளார். நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
நீட் விலக்கு தொடர்பாக மத்திய அரசின் 2 துறைகள் கேட்ட கேள்விகளுக்கு விரிவான பதில் அனுப்படும். சட்ட வல்லுநர்களின் ஆலோசனையுடன் தயாரான பதிலுக்கு, முதல்வரிடம் ஓரிரு நாளில் ஒப்புதல் பெருவோம்.
முதல்வர் ஒப்புதல் தந்த பிறகு மத்திய அரசுக்கு நீட் விலக்கு மசோதா குறித்து விளக்கம் அனுப்பப்படும் மற்றும் நீட் தேர்வின் பாதிப்புகள் குறித்து மத்திய அரசிடம் விரிவான அறிக்கை அளிக்கப்படும்.
மேலும், நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதே தமிழக அரசின் நோக்கம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.