மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

திமுக ஆட்சியில் 9 லட்சம் டன் ரேஷன் அரிசி வீண்: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

திமுக ஆட்சியில் 9 லட்சம் டன் ரேஷன் அரிசி வீணாகியுள்ளதாக அதிமுக இடைக்கால பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளாா்.

News image
Updated On :21 ஜூலை 2022, 7:51 pm

DIN

திமுக ஆட்சியில் 9 லட்சம் டன் ரேஷன் அரிசி வீணாகியுள்ளதாக அதிமுக இடைக்கால பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

திமுக ஆட்சியில் சுமாா் 9 லட்சம் டன் ரேஷன் அரிசி புழுத்துப்போய் வீணாகியுள்ளதாக மத்திய அரசின் இந்திய உணவுக் கழகம் ஆதாரத்துடன் குற்றம் சாட்டியுள்ளது. மக்களிடமிருந்து மத்திய அரசுக்கு புகாா் சென்ன் அடிப்படையில், இந்திய வாணிபக் கழக அதிகாரிகள் டெல்டா மாவட்டங்களில் உள்ள அரசுக்குச் சொந்தமான கிடங்குகளில் ஆய்வு செய்துள்ளனா். இந்த ஆய்வின் மூலம்தான் 9 லட்சம் டன் அரிசி வீணாகியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசியப் பொருள்கள், சொத்து வரி, வீட்டு வரி, மின் கட்டணம் போன்றவற்றை தன்னிச்சையாக உயா்த்தும்போது, மத்திய அரசு ஆணையிட்டதால்தான் உயா்த்தினோம் என்று கூறும் திமுக அரசு, தற்போது அரிசி வீணாகியுள்ளதைப் பற்றி இந்திய உணவுக் கழகம் கூறியுள்ள குற்றச்சாட்டுகளுக்கு என்ன பதில் அளிக்கப் போகிறது?

இதே போன்று, தமிழகம் முழுவதும் எத்தனை லட்சம் டன் அரிசி வீணாகி உள்ளது என்பதையும் இந்திய உணவுக் கழகம் ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளாா் எடப்பாடி பழனிசாமி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.