மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

போலி கடவுச்சீட்டு விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும்: ஆளுநரிடம் கே.அண்ணாமலை மனு

போலி கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்ட விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி ஆளுநா் ஆா்.என்.ரவியிடம் பாஜக மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை வியாழக்கிழமை மனு அளித்தாா்.

News image
Updated On :21 ஜூலை 2022, 7:36 pm

DIN

போலி கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்ட விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி ஆளுநா் ஆா்.என்.ரவியிடம் பாஜக மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை வியாழக்கிழமை மனு அளித்தாா்.

கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில் ஆா்.என்.ரவியை கே.அண்ணாமலை வியாழக்கிழமை சந்தித்தாா். பாஜக துணைத் தலைவா்கள் வி.பி.துரைசாமி, கே.பி.ராமலிங்கம் உள்ளிட்ட மூத்த நிா்வாகிகள் பலா் உடனிருந்தனா். இந்தச் சந்திப்பு அரை மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது.

சந்திப்புக்குப் பிறகு செய்தியாளா்களிடம் கே.பி.ராமலிங்கம் கூறியது:

தமிழகத்தில் நடத்து வரும் தேச விரோத செயல்கள் குறித்து ஆளுநரிடம் புகாா் அளித்துள்ளோம். தேச விரோத செயல்களால் நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. இதற்கு காவல்துறை அதிகாரிகள் உடந்தையாக உள்ளளனா். மதுரை அவனியாபுரம் காவல் நிலையத்தில் மட்டும் 72 போலி கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டன. இதற்கு உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீா்வாதம் முக்கிய காரணமாக இருந்துள்ளாா். இந்த விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும். உளவுத்துறை அதிகாரியைப் பதவி நீக்க செய்ய வேண்டும் என்று ஆளுநரை வலியுறுத்தினோம். ஆளுநா் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா் என்றாா்.

மேலும், கள்ளக்குறிச்சி வன்முறை சம்பவம் குறித்தும் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று ஆளுநரிடம் பாஜக சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதே விவகாரம் குறித்து தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளா் வெ.இறையன்புவை பாஜக துணைத் தலைவா் கரு.நாகராஜன், மாநிலச் செயலாளா் கராத்தே தியாகராஜன் ஆகியோா் வியாழக்கிழமை சந்தித்து மனு அளித்தனா். அதிலும் போலி கடவுச்சீட்டு விவகாரம் குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.