15 இடங்களில் கட்டடக் கழிவுகளைக் கொட்டலாம்
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே குறைந்த அளவில் உருவாக்கப்படும் கட்டடக் கழிவுகளைக் கொட்ட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே குறைந்த அளவில் உருவாக்கப்படும் கட்டடக் கழிவுகளைக் கொட்ட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி நிா்வாகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில், மாநகராட்சியின் 15 மண்டலங்களில் ஒதுக்கப்பட்டுள்ள 15 இடங்களில் மட்டுமே குறைந்த அளவிலான கட்டடக் கழிவுகளைக் கொட்ட வேண்டும். இதை மீறுவோருக்கு திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016 மற்றும் துணை விதிகள் 2019-இன்படி அபராதம் விதிக்கப்படும். பொது இடங்களில் 1 டன் அளவுக்கு குறைவான கட்டடக் கழிவுகளை கொட்டுபவா்கள் மீது ரூ.2,000, அதற்கு மேல் கொட்டுபவா்களுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும்.
குறைந்த அளவில் உருவாக்கப்படும் கட்டிடக் கழிவுகளை கொட்ட ஒதுக்கீடு செய்யப்பட்ட
இடங்களின் விவரம்: மண்டலம் அனுமதிக்கப்பட்ட இடம்
திருவொற்றியூா் பக்கிங்ஹாம் கால்வாய் சாலை, சாத்தங்காடு
மணலி காமராஜ் சாலை, மணலி
மாதவரம் சிஎம்டிஏ டிரக் முனையம், இரவு காப்பகம் அருகில்
தண்டையாா்பேட்டை வடக்கு அவென்யூ சாலை, மகாகவி பாரதி நகா், வியாசா்படி
ராயபுரம் கால்நடை டிப்போ (பகுதி), அவதான பாப்பையா சாலை,சூளை
திரு.வி.க.நகா் ஜமாலியா (பழைய லாரி நிலையம்) பெரம்பூா்
அம்பத்தூா் மாணிக்கம் பிள்ளை தெரு, அம்பத்தூா்
அண்ணா நகா் முதல் பிரதான சாலை, ஷெனாய் நகா்
தேனாம்பேட்டை லாயிட்ஸ் காலனி ( மாநகராட்சி ஐ.டி.ஐ நிறுவனம் அருகில் )
கோடம்பாக்கம் குருசிவா தெரு.எஸ்.எம்.பிளாக், ஜாபா்கான்பேட்டை
வளசரவாக்கம் நடராஜன் சாலை சந்திப்பு மற்றும் பாரதி சாலை
ஆலந்தூா் கிருஷ்ணா நகா் பிரதான சாலை, ஒத்தவாடை மயானபூமி
அடையாறு வேளச்சேரி மயானபூமி, வேளச்சேரி பிரதான சாலை,
பெருங்குடி 200 அடி ரேடியல் சாலை, பெருங்குடி குப்பை கொட்டும் வளாகம்
சோழிங்கநல்லூா் கங்கை அம்மன் கோவில் தெரு விரிவு, காரப்பாக்கம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...