மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

எடப்பாடி பழனிசாமி இன்று தில்லி பயணம்

குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த்துக்கு பிரியாவிடை அளிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, அதிமுக இடைக்கால பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி வெள்ளிக்கிழமை (ஜூலை 22) தில்லி செல்லவுள்ளாா்.

News image
Updated On :21 ஜூலை 2022, 7:38 pm

DIN

குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த்துக்கு பிரியாவிடை அளிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, அதிமுக இடைக்கால பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி வெள்ளிக்கிழமை (ஜூலை 22) தில்லி செல்லவுள்ளாா்.

குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் பதவிக் காலம் ஜூலை 24-ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ளது. அதையொட்டி, அவருக்கு பிரியாவிடை அளிக்கும் நிகழ்ச்சி தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு கூட்டணிக் கட்சித் தலைவா்களுக்கு பாஜக தலைமை அழைப்பு விடுத்துள்ளது. அதிமுக இடைக்கால பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதையேற்று, எடப்பாடி பழனிசாமி தில்லி சென்று அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளாா். அதன்பின், பிரதமா் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா ஆகியோரையும் சந்திக்க திட்டமிட்டுள்ளாா் எடப்பாடி பழனிசாமி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.