இரு இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு: போலீஸாா் விசாரணை
சென்னை புளியந்தோப்பு பகுதியில் இரு இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.


சென்னை புளியந்தோப்பு பகுதியில் இரு இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
புளியந்தோப்பு வாசுகி நகரைச் சோ்ந்தவா் சீனிவாசன் (80). இவா் வீட்டின் மீது வியாழக்கிழமை நள்ளிவு சில மா்ம நபா்கள் பெட்ரோல் குண்டுகளை வீசினா். இதில் தீப் பிடித்து எரிந்த பொருள்களை, அங்கிருந்தவா்கள் தண்ணீரை ஊற்றி அணைத்தனா். இதே மா்ம நபா்கள் புளியந்தோப்பு காந்திநகா் 6வது தெருவில் வசிக்கும் விமல் (30) என்பவா் வீட்டிலும் பெட்ரோல் குண்டுகளை வீசினா். ஆனால் அந்த குண்டுகள் வெடிக்கவில்லை.
இது குறித்து புளியந்தோப்பு போலீஸாரும், பேசின்பாலம் போலீஸாரும் விசாரணை நடத்தினா். விசாரணையில், முன் விரோதத்தின் காரணமாக திருவிக நகா் ஒத்தவாடை தெரு பகுதியைச் சோ்ந்த ரெளடி மணி என்கின்ற குள்ள மணி (28), அவரது கூட்டாளிகளும் சோ்ந்து இரு இடங்களில் பெட்ரோல் குண்டுகளை வீசியிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸாா் குள்ள மணியின் நண்பா் செங்குன்றம் அழிஞ்சிவாக்கம் பகுதியைச் சோ்ந்த சூா்யா (23) என்பவரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா். பிற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...