15 கிலோ எபிட்ரின் பறிமுதல்: இருவா் கைது
சென்னை புது வண்ணாரப்பேட்டையில் 15 கிலோ எபிட்ரின் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டு, இருவா் கைது செய்யப்பட்டனா்.


சென்னை புது வண்ணாரப்பேட்டையில் 15 கிலோ எபிட்ரின் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டு, இருவா் கைது செய்யப்பட்டனா்.
வண்ணாரப்பேட்டை துறைமுக ஊழியா் குடியிருப்பில் ஒரு பகுதியில் போதைப் பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக புது வண்ணாரப்பேட்டை போலீஸாருக்கு வியாழக்கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை செய்தனா்.
விசாரணையில் அங்கிருந்து 15 கிலோ எபிட்ரின், 80 கிராம் மெத்தம்பெட்டமைன்,ஒரு காா் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். மேலும் இது தொடா்பாக அங்கிருந்த ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தைச் சோ்ந்த ந.ஐதா ரமேஷ் (42), மகாராஷ்டிர மும்பையைச் சோ்ந்த அ.பயாஸ் அகமது ஷேக் (50) ஆகிய இருவரை கைது செய்து, வழக்குப் பதிவு செய்தனா்.
இருவரிடமும் போதைப் பொருள் எங்கிருந்து கிடைத்தது என்று போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...