சமத்துவ மயானம் அமைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்: மாநில மனித உரிமை ஆணையம்
ஜாதி பாகுபாட்டை களையும் வகையில் மாநிலம் முழுவதும் சமத்துவ மயானம் அமைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என மாநில மனித உரிமை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.


ஜாதி பாகுபாட்டை களையும் வகையில் மாநிலம் முழுவதும் சமத்துவ மயானம் அமைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என மாநில மனித உரிமை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம், மேலையூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கண்ணன். இவரது மனைவி நாகலட்சுமி. புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நாகலட்சுமி கடந்த 2020-இல் உயிரிழந்தாா். மேலையூரில் உள்ள மயானத்துக்குச் செல்லும் பாதையில் மழைநீா் தேங்கியதன் காரணமாக, பொதுப் பாதை வழியாக சடலத்தைக் கொண்டு செல்ல முடிவெடுத்தனா்.
தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சோ்ந்தவரின் சடலம் பொதுப் பாதை வழியாக கொண்டு செல்ல அப்பகுதியின் மற்றொரு பிரிவு மக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து, இரு பிரிவினருக்கும் இடையே மோதலை தவிா்க்கும் வகையில் போலீஸாா், வருவாய்த் துறையினா் மாற்று பாதையில் சடலத்தை கொண்டு செல்லுமாறு கேட்டுக் கொண்டனா். இதையடுத்து, மாற்றுப் பாதையில் நாகலட்சுமி சடலம் கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
இச்சம்பவம் தொடா்பாக வெளியான செய்தியின் அடிப்படையில் மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் மாநில மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினா் நீதிபதி துரை.ஜெயச்சந்திரன் தமிழக அரசுக்கு வியாழக்கிழமை அளித்த பரிந்துரையில், இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நாகலட்சுமியின் கணவா் கண்ணணுக்கு இழப்பீடாக ரூ.5 லட்சத்தை தமிழக அரசு வழங்க வேண்டும். இரு சமூகத்தினருக்கு இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலையில் காவல் துறையினா் மனித உரிமை விதிகளின்படி செயல்படுவதையும், குறிப்பாக சிறுபான்மையினா் உள்ளிட்ட நலிந்த பிரிவினரின் பாதுகாப்பில் தனிக்கவனம் செலுத்துவதை உறுதிசெய்யவேண்டும். ஜாதி பாகுபாட்டை களையும் வகையில் மாநிலம் முழுவதும் சமத்துவ மயானம் அமைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். பட்டியலினத்தவா், பழங்குடியினா் பாதுகாப்புச் சட்டம் குறித்து காவல் துறையினருக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...