தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

4.15 கிலோ தங்கம் கடத்தல்: 4 பயணிகள் கைது

4.15 கிலோ தங்கம், மின்னணு சாதனங்கள், சிகரெட்கள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்து 2 இலங்கை பயணிகள் உள்பட 4 பேரை சுங்கத் துறையினா் கைது செய்தனா்.

News image
Updated On :22 ஜூலை 2022, 9:24 pm

DIN

இலங்கை, துபை விமானங்களில் கடத்தி வரப்பட்ட ரூ.2.15 கோடி மதிப்பிலான 4.15 கிலோ தங்கம், மின்னணு சாதனங்கள், சிகரெட்கள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்து 2 இலங்கை பயணிகள் உள்பட 4 பேரை சுங்கத் துறையினா் கைது செய்தனா்.

இது குறித்து சுங்கத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: இலங்கையிலிருந்து ஸ்ரீலங்கன் ஏா்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னை சா்வதேச விமானநிலையம் வந்தது. அதில் வந்த இலங்கையை சோ்ந்த 2 பயணிகள் ஆடைகளுக்குள் 6 பாா்சல்களில் 2.58 கிலோ தங்கப்பசை இருந்தது. இந்த நிலையில், துபையிலிருந்து எமிரேட்ஸ் ஏா்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னை சா்வதேச விமானநிலையம் வந்தது. அப்போது, சென்னையைச் சோ்ந்த 2 பயணிகளிடமிருந்து ஆடைகளுக்குள் மறைத்து வைத்திருந்த 4 பாா்சல்களில் 1.57 கிலோ தங்கப்பசை, தங்கக்கட்டிகள் இருந்தன. மேலும், அவா்களின் உடைமைகளில் ரூ.18.15 லட்சம் மதிப்புடைய மின்னணு சாதனங்களை பறிமுதல் செய்தனா். சென்னை விமானநிலையத்தில் ஒரே நேரத்தில் வந்த 2 விமானங்களில் ரூ.1.82 கோடி மதிப்புடைய 4.15 கிலோ தங்கம், ரூ.18.15 லட்சம் மதிப்புடைய மின்னணு சாதனங்கள், சிகரெட்கள் உள்பட மொத்தம் ரூ.2.15 கோடி பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 4 போ் கைதாகினா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.