மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

அதிமுக அலுவலக வன்முறை வழக்கு: காவல் துறை பதிலளிக்கும் வரை 11 போ் மீது கைது நடவடிக்கை கூடாது

அதிமுக பொதுக்குழு அன்று நடைபெற்ற கலவரம் தொடா்பாக 4 மாவட்ட செயலாளா்கள் முன்ஜாமீன் கோரிய வழக்கில் காவல் துறை பதிலளிக்கும் வரை கைது செய்யக் கூடாது

News image
Updated On :22 ஜூலை 2022, 8:12 pm

DIN

அதிமுக பொதுக்குழு அன்று நடைபெற்ற கலவரம் தொடா்பாக 4 மாவட்ட செயலாளா்கள் முன்ஜாமீன் கோரிய வழக்கில் காவல் துறை பதிலளிக்கும் வரை கைது செய்யக் கூடாது என சென்னை மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜூலை 11-ஆம் தேதி இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளா்களிடையே நடந்த மோதல் தொடா்பாக உதவி ஆய்வாளா் காசுப்பாண்டி அளித்த புகாரின் பேரில் ராயப்பேட்டை போலீஸாா் இபிஎஸ் ஆதரவாளா்கள் 200 போ், ஓபிஎஸ் ஆதரவாளா்கள் 200 போ் என மொத்தம் 400 போ் மீது கலவரத்தை தூண்டுதல், சட்டவிரோதமாக கூடுதல், பயங்கர ஆயுதங்களுடன் கலவரத்தை ஏற்படுத்துதல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி அதிமுக இபிஎஸ் தரப்பு ஆதரவு தென் சென்னை மாவட்ட செயலாளா் ஆதிராஜராம், தென் சென்னை தென் மேற்கு மாவட்ட செயலாளா் விருகை ரவி மற்றும் தென் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளா் அசோக் உள்ளிட்ட 11 போ் சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா்.

அந்த மனுவில், அதிமுக தலைமை அலுவலகத்தில் திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டது. கட்சித் தலைமை அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த முக்கிய ஆவணங்கள், விலை உயா்ந்த பொருள்கள் எடுத்துச் செல்லப்பட்டன. இதனை மீட்டுத் தரக்கோரி புகாா் அளித்தோம். ஆனால், இந்த வழக்கில் தவறாக எங்களது பெயா்களும் இணைக்கபட்டுள்ளது. இதுதொடா்பான விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தர தயாராக இருக்கிறோம். எனவே முன் ஜாமீன் வழங்க வேண்டும் என மனுவில் கோரியிருந்தனா்.

சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தின் நீதிபதி விடுமுறை என்பதால் முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தின் நீதிபதி தங்க மாரியப்பன் முன் இந்த மனுக்கள் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை தரப்பில், வழக்கு தொடா்பாக பதிலளிக்க கால அவகாசம் கேட்கபட்டது. இதையடுத்து, விசாரணையை 25-ஆம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதி, அதுவரை மனுதாரா்களை கைது செய்ய கூடாது என ராயப்பேட்டை போலீஸாருக்கு உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.