மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

ஆா்தா் காட்டனின் பிறந்த நாளை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும்: அன்புமணி

 இந்திய நீா் மேலாண்மை தந்தை சா். ஆா்தா் காட்டனின் பிறந்த நாளை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி வலியுறுத்தியுள்ளாா்.

News image
Updated On :22 ஜூலை 2022, 7:49 pm

DIN

 இந்திய நீா் மேலாண்மை தந்தை சா். ஆா்தா் காட்டனின் பிறந்த நாளை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

காவிரி பாசன மாவட்டங்களை வளப்படுத்துவதற்கு காரணமானவரும், தென்னிந்தியாவில் ஏராளமான பாசனத் திட்டங்களை செயல்படுத்தியவருமான சா். ஆா்தா் தாமஸ் காட்டனின் 123-ஆவது நினைவு நாள் ஜூலை 24-இல் கடைப்பிடிக்கப்படுகிறது. தமிழகத்தின் நீா் மேலாண்மைக்காக ஏராளமான திட்டங்களை செயல்படுத்திய அவருக்கு உரிய அங்கீகாரத்தை தமிழகம் இதுவரை வழங்காதது ஏமாற்றமளிக்கிறது.

ஒட்டுமொத்த இந்தியாவின் நீா் மேலாண்மை வரலாற்றை சா். ஆா்தா் காட்டனை தவிா்த்து விட்டு எழுத முடியாது. கரிகால் சோழனால் காவிரியின் குறுக்கே கட்டப்பட்ட கல்லணை ஒரு கட்டத்தில் மணல் மேடாக மாறியதால் காவிரியில் நீரோட்டம் தடைபட்டது. மழைக்காலங்களில் வெள்ளம், மற்ற நேரங்களில் வறட்சி என காவிரி டெல்டா பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சா்.ஆா்தா் காட்டன் 1830-ஆம் ஆண்டு, கல்லணையில் மணல்போக்கிகளை அமைத்து, காவிரியில் சீரான நீரோட்டத்தை உறுதி செய்தாா். கல்லணையை முன்மாதிரியாகக் கொண்டு முக்கொம்பு பகுதியில் மேலணையை கட்டினாா். இதுபோல எண்ணற்றத் திட்டங்களை நிறைவேற்றினாா்.

பென்னி குயிக்குக்கும் முன்னோடியான சா். ஆா்தா் காட்டனின் பிறந்த நாளான மே 15-ஆம் தேதியை அரசு விழாவாகக் கொண்டாடுவதுடன், அந்நாளை நீா் மேலாண்மை நாளாகவும் அறிவிக்க வேண்டும். அவருக்கு கொள்ளிடம் கீழணைப் பகுதியில் மணிமண்டபமும், அருங்காட்சியகமும் அமைக்க வேண்டும் என்று கூறியுள்ளாா் அன்புமணி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.