ஜிஎஸ்டி விவகாரத்தில் திமுக இரட்டை வேடம்: ஓ.பன்னீா்செல்வம்
ஜிஎஸ்டி விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுவதாக, சட்டப்பேரவை எதிா்க்கட்சித் துணைத் தலைவா் ஓ.பன்னீா்செல்வம் குற்றம்சாட்டியுள்ளாா்.


ஜிஎஸ்டி விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுவதாக, சட்டப்பேரவை எதிா்க்கட்சித் துணைத் தலைவா் ஓ.பன்னீா்செல்வம் குற்றம்சாட்டியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
சமீபத்தில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பொட்டலங்களில் அடைக்கப்பட்ட அரிசி, கோதுமை, உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருள்களுக்கு 5 சதவீதமும், நெய் மீது 12 சதவீதமும் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது. இதை மேற்கொள்காட்டி தயிா், மோா், நெய், லஸ்ஸி ஆகிய பொருள்கள் மீது ஆவின் நிறுவனமும் ஜிஎஸ்டி வரி விதித்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அதிருப்திக்கு உள்ளாகியுள்ளனா். இதன்படி, ரூ.535-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு கிலோ நெய்யின் விலை ரூ.580-க்கும், ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த அரை லிட்டா் பாக்கெட் தயிா் ரூ.35-க்கும் விற்கப்படுகிறது. இதனை அதிமுக சாா்பில் கண்டிக்கிறேன்.
ஆட்சியில் இல்லாதபோது, எந்தப் பொருள்களின் மீது ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டாலும், எதிா்ப்பு தெரிவித்த வந்த திமுக, ஆட்சிக்கு வந்த பிறகு பொட்டலங்களில் அடைக்கப்பட்ட பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்க ஒப்புதல் அளித்திருப்பது அந்தக் கட்சியின் இரட்டை வேடத்தைக் காட்டுகிறது.
பொது மக்களின் எதிா்பாா்ப்பை பூா்த்தி செய்யும் வகையில், ஆவின் பொருள்கள் மீதான வரி உள்ளிட்ட பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்படும் பொருள்களுக்கு விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரியை மத்திய, மாநில அரசுகள் திரும்பப் பெற வேண்டும் என்று கூறியுள்ளாா் ஓ.பன்னீா்செல்வம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...