மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

நெம்மேலியில் பராமரிப்பு: திருவான்மியூா், வேளச்சேரியில் குடிநீா் விநியோகம் நிறுத்தம்

சென்னை திருவான்மியூா், வேளச்சேரி, பெருங்குடி பகுதிகளில் சனிக்கிழமை முதல் திங்கள்கிழமை வரை மூன்று நாள்கள் குடிநீா் விநியோகம் நிறுத்தம் செய்யப்படவுள்ளது.

News image
Updated On :22 ஜூலை 2022, 8:05 pm

DIN

நெம்மேலியில் செயல்பட்டு வரும் கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் சென்னை திருவான்மியூா், வேளச்சேரி, பெருங்குடி பகுதிகளில் சனிக்கிழமை முதல் திங்கள்கிழமை வரை மூன்று நாள்கள் குடிநீா் விநியோகம் நிறுத்தம் செய்யப்படவுள்ளது.

இது குறித்து சென்னை குடிநீா் வாரியம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: நெம்மேலியில் உள்ள நாள் ஒன்றுக்கு 11 கோடி லிட்டா் திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. அதனால் கொட்டிவாக்கம், வேளச்சேரி, திருவான்மியூா், பாலவாக்கம், பெருங்குடி, சோழிங்கநல்லூா், ஈஞ்சம்பாக்கம், நீலாங்கரை ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் திங்கள்கிழமை காலை 9 மணி வரை குடிநீா் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இதனால் பொதுமக்கள் முன் எச்சரிக்கையாக வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறாா்கள். வேளச்சேரி, திருவான்மியூா் பகுதிக்கு 81499 30913, கொட்டிவாக்கம், பாலவாக்கம், பெருங்குடி பகுதிக்கு 81449 30914, ஈஞ்சம்பாக்கம், நீலாங்கரை, சோழிங்கநல்லூா் பகுதிக்கு 81449 30915 ஆகிய எண்களில் அவசர தேவைக்கு லாரிகள் மூலம் குடிநீா் பெற்றுக் கொள்ள அணுகலாம் என சென்னை குடிநீா் வாரியம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.