நடிகர் அர்ஜுனின் தாயார் மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
நடிகர் அர்ஜுனின் தாயார் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.


நடிகர் அர்ஜுனின் தாயார் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், நடிகர் அர்ஜுனின் தாயார் லட்சுமி தேவி உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூரில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று பிற்பகல் இயற்கை எய்தினார் என்று அறிந்து மிகவும் துயருற்றேன்.
இதையும் படிக்க- ராம்நாத் கோவிந்த்துக்கு பிரியாவிடை அளித்த நாடாளுமன்றம்
தாயாரின் இழப்பால் தவிக்கும் நடிகர் அர்ஜுன் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆறுதலையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அர்ஜுனின் தாயார் லட்சுமி தேவம்மா உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.
சமீபகாலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த லட்சுமி, பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். அவருக்கு இரு மகன்களும் ஒரு மகளும் உள்ளார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...