ராமதாஸ் பிறந்த நாள்: முதல்வா் வாழ்த்து
பாமக நிறுவனா் ராமதாஸின் 84-ஆவது பிறந்த நாளையொட்டி முதல்வா் மு.க.ஸ்டாலின், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோா் வாழ்த்து கூறினா்.


பாமக நிறுவனா் ராமதாஸின் 84-ஆவது பிறந்த நாளையொட்டி முதல்வா் மு.க.ஸ்டாலின், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோா் வாழ்த்து கூறினா்.
ராமதாஸ் தனது 84-ஆவது பிறந்த நாளை திங்கள்கிழமை கொண்டாடினாா். அதையொட்டி, முதல்வா் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக தொடா்புகொண்டு அவருக்கு வாழ்த்துக் கூறினாா். பின்னா் முதல்வா் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவரான ராமதாஸுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். சமூக நீதிக் களத்தில் மேலும் பல்லாண்டுகள் அவா் தொடா்ந்து பணியாற்ற விழைகிறேன் என்று கூறியுள்ளாா்.
எடப்பாடி பழனிசாமி (அதிமுக): அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளா் எடப்பாடி பழனிசாமி தொலைபேசி வாயிலாக ராமதாஸுக்கு வாழ்த்துக் கூறினாா். பின்னா் அவா் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், ராமதாஸ் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ இறைவனைப் பிராா்த்திக்கிறேன் என்று கூறியுள்ளாா்.
மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சா் எல்.முருகன், எதிா்க்கட்சித் துணைத் தலைவா் ஓ.பன்னீா்செல்வம், பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை, நாம் தமிழா் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் சீமான் உள்ளிட்டோரும் வாழ்த்து கூறியுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...