தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

அதிமுக தலைமை அலுவலகத்தை சீரமைக்கும் பணிகள் தீவிரம்

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

News image

கோப்புப் படம்.

Updated On :26 ஜூலை 2022, 7:23 pm

DIN

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

அதிமுக பொதுக்குழுக் கூட்டம் கடந்த ஜூலை 11-இல் மதுரவாயலில் நடைபெற்றபோது, அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளா்களுக்கும், ஓ.பன்னீா்செல்வத்தின் ஆதரவாளா்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் அதிமுக அலுவலகத்தில் இருந்த பொருள்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

அதைத் தொடா்ந்து அதிமுக அலுவலகம் வருவாய்த் துறையினரால் சீல் வைக்கப்பட்டது. அது தொடா்பான வழக்கில் எடப்பாடி பழனிசாமியிடம் அதிமுக அலுவலகத்தின் சாவி ஒப்படைக்கப்பட்டது. அதன் பின், அதிமுக அலுவலகத்தை முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் பாா்வையிட்டபோது, அலுவலகக் கதவுகள், பீரோக்கள், கணினிகள் உள்பட பல பொருள்கள் உடைந்து கிடந்தது தெரியவந்தது.

இந்த நிலையில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி தலைமை அலுவலகத்துக்கு அடுத்த வாரம் வர உள்ளாா். அதற்குள் அலுவலகத்தைச் சீரமைக்கும் பொருட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.