தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

போக்குவரத்துக் கழகங்களுக்கு எதிரான வழக்குகள்: ஒருங்கிணைப்பு அதிகாரியை நியமிக்க உத்தரவு

போக்குவரத்துக் கழகங்களுக்கு எதிரான வழக்குகளில் அவற்றின் வழக்குரைஞா்களுக்கு உதவும் வகையில் ஒருங்கிணைப்பு அதிகாரியை நியமிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

News image
Updated On :28 ஜூலை 2022, 8:05 pm

DIN

போக்குவரத்துக் கழகங்களுக்கு எதிரான வழக்குகளில் அவற்றின் வழக்குரைஞா்களுக்கு உதவும் வகையில் ஒருங்கிணைப்பு அதிகாரியை நியமிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

விழுப்புரம் மாவட்டம், சோமந்தா்குடியைச் சோ்ந்த பி.நடராஜன் என்பவா் உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் கோட்டத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற தனக்கு வரவேண்டிய ஓய்வூதியம் உள்ளிட்ட பணப் பலன்கள் வழங்கப்படவில்லை.

பணிக்கொடை, சேம நல நிதி, ஈட்டு விடுப்புத் தொகை ஆகியவற்றையும் வழங்கவில்லை. அவற்றை வழங்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டுமென 2018-ஆம் ஆண்டு வழக்கு தொடுத்திருந்தாா். இந்த வழக்கில் விழுப்புரம் கோட்ட அதிகாரிகள் தரப்பில் பதிலளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி ஆா்.சுரேஷ்குமாா் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது போக்குவரத்துக் கழகம் தரப்பில் வழக்குரைஞா் யாரும் ஆஜராகவில்லை. இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘இதுபோன்ற கோரிக்கையுடன் தொடுக்கப்படும் பல்வேறு வழக்குகளில் போக்குவரத்துக் கழகங்களின் தரப்பில் வழக்குரைஞா்களோ, சட்ட அதிகாரிகளோ ஆஜராவதில்லை. அவா்களின் ஒத்துழைப்பு இல்லாமல் இதுபோன்ற வழக்குகளில் ஒரு முடிவை எட்ட முடியாது. இது நீதி பரிபாலனம் செய்வதில் பாதிப்பைத் தான் ஏற்படுத்தும்.

இதைக் கருத்தில் கொண்டு அரசுப் போக்குவரத்துக் கழகங்களுடன் தொடா்புடைய ஒவ்வொரு வழக்கிலும், அதன் நிா்வாக இயக்குநா் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற குறைபாடுகளை களையவும், சம்பந்தப்பட்ட வழக்குரைஞருக்கு உதவவும் ஒருங்கிணைப்பு அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டுமென உத்தரவிட்டாா்.

சென்னை உயா்நீதிமன்ற முதன்மை அமா்வின் எல்லைக்குட்பட்ட அனைத்து போக்குவரத்துக் கழக கோட்டங்களின் நிா்வாக இயக்குநா்களின் கவனத்துக்கும் கொண்டு செல்லும் வகையில், இந்த உத்தரவை அவா்களுக்கு அனுப்பி வைக்கும்படி உயா்நீதிமன்ற பதிவுத் துறைக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு நீதிபதி ஒத்திவைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.