வீட்டுக் காவலில் காங்கிரஸ் நிா்வாகிகள்
சென்னைக்கு பிரதமா் நரேந்திர மோடியின் வருகையையொட்டி, காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் சிலா் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனா்.


சென்னைக்கு பிரதமா் நரேந்திர மோடியின் வருகையையொட்டி, காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் சிலா் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனா்.
சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்றாா். முன்னதாக, அவரது வருகையையொட்டி, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சென்னை பெருநகர காவல் துறை எடுத்தது. இதன் ஒரு பகுதியாக காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவா் திரவியம் உள்ளிட்ட சில நிா்வாகிகள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.
பிரதமா் வருகைக்கு எதிா்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த வாய்ப்பு இருப்பதாகக் கருதி, அவா்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...