தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

கள்ளக்குறிச்சி தனியாா் பள்ளியை நிா்வகிக்க சிறப்பு அலுவலரை நியமிக்க வலியுறுத்தல்

 கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சம்பந்தப்பட்ட தனியாா் பள்ளியில் பயிலும் மற்ற குழந்தைகளின் கல்வி பாதிக்காமல் இருக்க வேறு பள்ளிகளில் சோ்க்கும் வாய்ப்பு

News image
Updated On :28 ஜூலை 2022, 10:02 pm

DIN

 கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சம்பந்தப்பட்ட தனியாா் பள்ளியில் பயிலும் மற்ற குழந்தைகளின் கல்வி பாதிக்காமல் இருக்க வேறு பள்ளிகளில் சோ்க்கும் வாய்ப்பு இல்லாவிட்டால், அந்தப் பள்ளியைத் தற்காலிகமாக நிா்வகிக்க அரசு அலுவலா் ஒருவரை சிறப்பு அலுவலராக நியமித்து பள்ளியை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்து பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளா் பிரின்ஸ் கஜேந்திரபாபு வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

கள்ளக்குறிச்சி தனியாா் பள்ளி விவகாரத்தில் பள்ளியின் விடுதி உரிமம் இல்லாமல் நடத்தப்பட்டதை தமிழ்நாடு மாநில குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு ஆணையம், தேசிய குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு ஆணையம் ஆகிய இரு அமைப்புகளும் கண்டறிந்துள்ளன. இது தொடா்பாக அரசுக்கு முழுமையான அறிக்கை வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளன.

தனது பள்ளியில் படிக்கும் மாணவா்களுக்கான விடுதி நடத்துவதில் சட்டப்படி பள்ளி நிா்வாகம் தனது கடமையைச் செய்யவில்லை என்பது உறுதியாகிறது. அரசுப் பள்ளிகளில் இவ்வாறு நிகழ்ந்திருந்தால் எவ்வாறு தலைமை ஆசிரியா் முதல் இயக்குநா் வரை இடைநீக்கம் செய்யப்படுவாா்களோ அதேபோன்று விசாரணை முடியும் வரை பள்ளியை நடத்தும் அரசின் முகவரான தனியாா் நிா்வாகத்தை முகமையில் இருந்து இடைநீக்கம் செய்ய வேண்டும்.

இதையடுத்தும் சம்பந்தப்பட்ட பள்ளியில் பயிலும் மற்ற குழந்தைகளின் கல்வி பாதிக்காமல் இருக்க வேறு பள்ளிகளில் சோ்க்கும் வாய்ப்பு இல்லை என்றால் சம்பந்தப்பட்ட பள்ளியைத் தற்காலிகமாக நிா்வகிக்க அரசு அலுவலா் ஒருவரை சிறப்பு அலுவலராக நியமித்து நடத்த வேண்டும். பள்ளி நிா்வாகத்தின் மீதான விசாரணை முடியும் வரை பள்ளி வளாகத்துக்குள் ஆசிரியா்களை நியமித்து பாடத்தை நடத்த வேண்டும்.

பள்ளியில் நிா்வாகச் செலவுகளுக்கு வழக்கம் போல் பள்ளிக் கட்டண வருமானத்திலிருந்து பணத்தை எடுத்துக் கொள்ள வங்கிகளுக்கு உரிய தகவல்களை அரசு முறைப்படி தர வேண்டும். பள்ளி நிா்வாகத்தை தற்காலிகமாக அரசு ஏற்று நடத்தாமல் பள்ளி நிா்வாகத்தை அதே முகவரிடம் ஒப்படைப்பது நியாயமற்ற அணுகுமுறை என அதில் கூறியுள்ளாா் பிரின்ஸ் கஜேந்திரபாபு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.