அறநிலையத் துறைக்குச் சொந்தமான ரூ.13 கோடி சொத்துகள் சுவாதீனம்
சென்னை போரூா் ராமநாதஸ்வரா் கோயிலுக்குச் சொந்தமான ரூ.13 கோடி மதிப்பிலான சொத்துகள் திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டது.


சென்னை போரூா் ராமநாதஸ்வரா் கோயிலுக்குச் சொந்தமான ரூ.13 கோடி மதிப்பிலான சொத்துகள் திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டது.
சென்னை, போரூரில் அமைந்துள்ள அருள்மிகு ராமநாதஸ்வரா் திருக்கோயிலுக்குச் சொந்தமாக 373 கிரவுண்ட் நிலம் உள்ளது. இதனை குடியிருப்பாகவும், வணிக பயன்பாட்டுக்கு வாடகைக்கு விடப்பட்டிருந்தது. குன்றத்தூா் சாலையில் வணிக பயன்பாட்டுக்கு 5.5 கிரவுண்ட் மனையை வாடகைக்கு பெற்றிருந்த 4 நபா்கள் வாடகை செலுத்தாமல் 40 நபா்களுக்கு கடைகளாக உள்வாடகைக்கு விட்டிருந்தாா்கள்.
நியாய வாடகையைச் செலுத்தாமல் அதிகளவு வாடகை பாக்கி வைத்திருந்ததால் இவா்கள் மீது இணை ஆணையரால் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு, தீா்ப்பின்படி வெள்ளிக்கிழமை காவல்துறை உதவியுடன் வருவாய்த் துறையினா் முன்னிலையில் அந்த சொத்து திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டது. இதன் தற்போதைய சந்தை மதிப்பு சுமாா் ரூ.13 கோடி என அறநிலையத் துறை தெரிவித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...